தெலங்கானா ஜக்தியால் மாவட்டம் துங்கூரையை சேர்ந்த ஓபுலா அஜய் என்பவர் சென்ற 4 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வமிக்க எமிரேட்ஸ் லக்கி டிராவில் 30 திராம்களுக்கு (ரூ.674) 2 லாட்டரி சீட்டுகளை ஓபுலா அஜய் வாங்கி இருக்கிறார். இவற்றை ஒரு லாட்டரி சீட்டுக்கு 1.50 கோடி திராம் பரிசு கிடைத்து உள்ளது.
இதன் இந்திய மதிப்பு ரூபாய்.30 கோடி ஆகும். இதை சற்றும் எதிர்பார்க்காத ஓபுலா அஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்த பணத்தின் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்காகவும், மீதம் உள்ள பணத்தை தனது சொந்த ஊரில் தொழில் செய்ய பயன்படுத்துவதாகவும் ஓபுலா அஜய் தெரிவித்து உள்ளார்.