திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அவர்கள் படிக்கிற 14 வயதிலேயே சுயமரியாதை உணர்வை பெற்றவர். ராமையா என்ற பெயரோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர், அண்ணாவை கண்ட பிறகு அன்பழனாக மாறியவர், பிறகு பெரியார் இடத்தில் மாணவராக இருந்தவர், அதற்கு பிறகு இரண்டாம் இடத்திலே அணுகும் தொண்டராக இருந்தவர். இரண்டு தலைமுறைகளை பார்த்தவர்,
மூன்றாவதாக தலைவர் கலைஞரை தலைமை ஏற்று மூன்றாவது தலைமுறையை பார்த்தவர், அதற்குப் பிறகு அவர் மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையை பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி ஐந்தாவது தலைமுறையையும் பார்த்தவர். அந்த நீண்ட நெடிய பெருமகன் இன்றைக்கு இல்லை என்கின்ற போது இதயம் ஏங்குகிறது.
இவ்வளவு பெரிய தலைவர், எத்தனை பேரை பார்த்திருக்கிறார் ஆனால், அவ்வளவு பேரை பார்த்து இருந்தாலும்… படிப்பு எம்.ஏ என்றாலும்… சிந்திக்கின்ற திறன் படைத்தவர் என்றாலும்…. ஒன்றை கடைசி வரையிலும் சொன்னார். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான் இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார், அடிக்கடி சொல்வார்…. கட்சியை விட நான் பெரியவன் என்று சொன்னவர் இந்த கட்சியிலே நீண்ட காலத்திற்கு இருக்க மாட்டான் என்பதற்கு ஒரு ஏழு, எட்டு பேரை உதாரணம் காட்டி சொல்வார்.
ஆனால் நான் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், இந்த இயக்கம் பெரியது, நான் அதிலே சிறு துரும்பு என்று நினைப்பவர் தான் இயக்கத்திலே இருக்க முடியும் என்று சொல்வார். அந்த எண்ணம் இருந்த காரணத்தினால் தான் இங்கே வைகோ சொன்னார். திருவாரூர் கூட்டத்திற்கு தலைவரோடு போயிருக்கிறார் பேராசிரியர்… அது ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி.. இஸ்லாமிய நிகழ்ச்சியில் என் பின்னால் ஒரு மாணவன் வந்திருக்கிறான் என்று பேச வைத்தார்.
அப்போது தான் பேராசிரியரை நான் பார்த்தேன் என்று சொல்வார். அப்படி பார்த்தவர் அவர் எம்.ஏ., இவர் எஸ்.எஸ்.எல்சி. இதிலே நான் உழைப்பதில் பெரியவனா ? கலைஞர் உழைப்பதில் பெரியவரா என்று தனக்குள் பார்த்து என்னை விட உழைக்க கூடியவர் தலைவர். எனவே தலைவராக ஏற்கிறேன் என்று சொல்லுகின்ற அந்த பக்குவம் இருக்கிறதே, அதுதான் அவருக்கு இன்றைக்கு பெருமை என தெரிவித்தார்.