Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிவேகம்….. சூறைக்காற்று புழுதி….. விபத்தில் சிக்கி வாலிபர் மரணம்…. காஞ்சி அருகே சோகம்…..!!

காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி. இவர் கடந்த ஆண்டுதான் கல்லூரி படிப்பை முடித்தார். இந்நிலையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் இவர் நேற்று தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாலஜாபுரத்திலிருந்து  வண்டலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது படப்பை அருகே நிலைதடுமாறிய இவர் காற்று வேகமாக வீசியதால் கண்ணில் தூசி விழுந்து வாகனம் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராம்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில்  தகவல் தெரிவிக்க, உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |