Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பீதி… “கிரிக்கெட் மட்டும் தான் வாழ்க்கையா… நிறைய இருக்கு… நாடு திரும்புகிறார் லின்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சதமடித்து தனது அணியை அரையிறுதிக்கு முன்னேறச் செய்த நிலையில் கிறிஸ் லின் நாடு திரும்புகிறார்.

பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்  (PSL) நடைபெற்று வருகின்றது. அதேசமயம் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் மிரட்டலால் 99  சதவீத விளையாட்டு தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டு, ரத்தும் செய்யப்பட்டுள்ளன.  ஆனால் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதன் காரணமாக எப்படியாவது போட்டியை முழுமையாக முடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறது.

இதனால் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களை மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தியது. இதனிடையே பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிய போதிலும் லாகூர் குவாலண்டர்ஸ் (Lahore Qalandars) அணிக்காக விளையாடி வந்த ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் நேற்றைய போட்டியில் கலந்து கொண்டு அதிரடியாக 55 பந்தில் 113 ரன்கள் அடித்து அசத்தினார். இவரது அதிரடி சதத்தால் லாகூர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தநிலையில் கிறிஸ் லின் சொந்த நாடு திரும்புவாத தெரிவித்துள்ளார். அதாவது ‘‘கிரிக்கெட்டை விட வாழ்க்கையில் அதிகம் இருக்கின்றன’’ என இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டு PSL -ல் இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இதுகுறித்து கிறிஸ் லின் கூறுகையில் ‘‘ஒட்டுமொத்தமாக என் நேரத்தை நான் மகிழ்ச்சியாக செலவழித்தேன். துரதிஷ்டவசமாக இந்த சூழ்நிலைகளில் சொந்த நாடு திரும்புவத்ற்கு முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட்டை விட வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று நான் எப்போதும் சொல்லியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/B9xPjinHgQg/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |