Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி இருக்கிறது. அதாவது மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி டிஏ கணக்கீடு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களுக்குரிய அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்குவது நடைமுறையில் இல்லை என அரசு தெளிவாகக் கூறியுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற அகவிலைப்படி(டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம்(டிஆர்) போன்றவற்றை நிறுத்தப்பட்டது. அண்மையில் இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்ட நிலுவைத் தொகை கொடுப்பதற்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கொரோனா காலத்தில் நிலுவையில் வைக்கப்பட்ட 18 மாதங்களுக்குரிய டிஏ மற்றும் டிஆர் விடுவிப்பு பற்றி பல்வேறு ஊழியர்கள், ஓய்வூதியர் சங்கங்களிடமிருந்து அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. எனினும் தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார நிலைமையை கருதி ஜனவரி 1, 2020 முதல் ஜனவரி 1, 2021 வரை செலுத்த வேண்டிய 3 தவணை டிஏ மற்றும் டிஆர்-ஐ மத்திய அரசு நிறுத்தி உள்ளது. ஆகவே அது கொடுக்கப்படாது என நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |