இனி தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அது என்னவென்றால் தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதாதான் அது.
இதன்படி தமிழ் வழியில் கல்வி கற்றோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த மசோதா பெரும்பான்மையான தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த மசோதாவிற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.