Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் மத்திய அரசு?…. மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டு மூலம் பல்வேறு மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.

அதன்படி மாதம் தோறும் ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற தகவல் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது ஆதார் கார்டு உள்ளவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் என்ற தகவல் முற்றிலும் போலியானது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் இது போன்ற தகவல் மோசடி கும்பலால் பகிரப்பட்டு வருவதாகவும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |