தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 3-ம் பாடலான கேங்ஸ்டா டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகிறது. இந்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போஸ்டருடன் அறிவித்துள்ளார். மேலும் கேங்ஸ்டா பாடலின் லிரிக்ஸ் புகைப்படத்தையும் ஜிப்ரான் ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/GhibranOfficial/status/1605912650289815552?s=20&t=nAOD1qNw_0lQhRgzfXi0EA