கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற சொல்கிறோம். திமுக தேர்தல் வாக்குறுதியாக பொய் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளது.
பொய் சொல்வதற்காக ஒரு போட்டி வைத்தால் அதில் தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் தான் வெற்றி பெறுவார்கள். மத்திய அரசு மின் கட்டணத்தை எந்த இடத்திலும் உயர்த்தவில்லை. இந்த ஆட்சியில் ரூப் டாப் சோலார் ஒரு கிலோ வாட்டுக்கு ரூபாய் 5000 லஞ்சம் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நான் கோவைக்கு வரும் அமைச்சரை பற்றி என்ன சொல்வது. அவர் பொய்யை சொல்வதற்காகவே கோவைக்கு வருவதாக எனக்கு தோன்றுகிறது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அமைச்சரானபோது என்ன நடந்தது என்பதை உதயநிதி அமைச்சரானதை வைத்து பார்ப்போம்.
அதன் பிறகு ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வேடிக்கை பார்க்கும் ஒரு கூட்டம். அது ஒரு என்டர்டெயின்மென்ட் நடை பயணத்தின் முடிவு. தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் பனை வெல்ல பயன்பாட்டை தொடங்கி வைப்போம் என்று கூறியது.
அது இந்த பொங்கல் பண்டிகைக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் வெறும் 1000 ரூபாயை மட்டும் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற பார்க்கிறது இந்த அரசு. இப்படி பொய்களை மட்டும் சொல்லும் திமுக ஆட்சியை விரைவில் மக்கள் முடித்து வைப்பார்கள். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எல்லாமே மாறும் என்று கூறினார்.