பொழுதுபோக்குக்காக சமூகவலைத்தளங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சீனாவின் டிக்டாக் செயலி அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து அதில் வரம்பு மீறி வீடியோக்களை வெளியிடுவதாகவும், இதனால் இளைய சமூகத்தினர் தவறான பாதையில் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதி இந்திய அரசு டிக்டாக் செயலியை தடைசெய்தது. அதன்பின் Sharechat செயலி அதிகளவு பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அதிக முதலீடுகள் Sharechat மீது குவிந்து வருகிறது.
இப்போது 650 மில்லியன் டாலர் மதிப்பில் நிறுவனம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் உலக நாடுகளில் இச்செயலியை அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இன்னும் முதலீடுகள் பெறுவதற்குரிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக 160 மில்லியன் பயனாளர்களுடன் இந்தியாவின் 15 மொழிகளில் செயல்பட்டு வரும் Sharechat நிறுவனத்தை கூகுள் வாங்க ஆலோசித்து வருகிறது. Sharechat நிறுவனமானது கூகுள் கைக்கு செல்லும்போது, மேலும் அதிக அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.