இளவரசர் ஹரியை திருமணம் செய்த பின் அரச குடும்பத்தில் முதல்முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய அனுபவத்தை மேகன்மார்கல் வெளிப்படுத்தியுள்ளார். மேகன் அண்ட் ஹரி என்னும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஆவண படத்தில் மேகன்மார்கலே தனது திருமணத்திற்கு பின் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் தனது முதல் கிறிஸ்மஸ் கொண்டாடியதை நினைவுகூர்ந்துள்ளார். அதில் அவர் “எனக்கு சாண்ட்ரிங் ஹாமில் நடைபெற்ற முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் தெளிவாக நினைவிருக்கிறது. என் அம்மாவை தொலைபேசியில் அழைத்தபோது, அவர் அங்கு எப்படி இருக்கிறது? என கேட்டார்.
அதற்கு நான் கடவுளே இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என கூறினேன். இது ஒரு பெரிய குடும்பம் நான் எப்போதும் விரும்புவதுபோல் இந்த நிலையான அசைவும், ஆற்றலும், வேடிக்கையும் இருந்தது. மேலும் இரவு உணவின் போது ஹரியின் தாத்தாவிற்கு அருகில் நான் செட் செய்யப்பட்டேன். அப்போது அது மிகவும் அற்புதம் என நான் நினைத்தேன். இதனை அடுத்து நாங்கள் அரட்டை அடித்தோம். நன்றாக இருந்தது என விரும்பினேன். எனக்கு எல்லாம் நன்றாக நடந்ததாக நினைத்தேன்” என அவர் கூறியுள்ளார்.