கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்கு , வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தநிலையில் தமிழக முதல்வர் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதில் , மக்கள் அதிகமான கூட்டம் கூட கூடிய ஊர்வலங்கள் , பொதுக்கூட்டங்கள் , கோடைகால பயிற்சி வகுப்புகள் , முகாம்கள் , மாநாடுகள் , கருத்தரங்குகள் , கண்காட்சிகள் , கலாச்சார நிகழ்வுகள் விளையாட்டு போட்டிகள் போன்ற எந்த நிகழ்வுகளும் மார்ச் 31ம் தேதி வரை நடைபெற கூடாது என்று கூறியிருக்கிறார்கள். மேலும் திருவிழாக்களில் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளும் குறைந்த அளவில் மக்கள் கூட வேண்டும் என்றும் , அதற்கு சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள் , நீச்சல் குளங்களை மூட வேண்டும் பள்ளி கல்லூரிகளை பொருத்தவரை கல்வி நிறுவனங்கள் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் , மருத்துவம் சார்ந்த கல்வி தவிர மற்ற கல்வி நிறுவனங்கள் , அனைத்து பள்ளி , கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டத்தோடு , திட்டமிட்டபடி 10,+1 ,+2 தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.