குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜன. மாதம் தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டிச. மாதம் (இந்த மாதம்) முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 7,301 என்ற காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து புதிய இடங்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. எனவே, தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.