தமிழகத்தில் அரசு வரி வசூல் செய்யும் முறையில் புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளது. அதாவது கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை எளிமையாக செலுத்த அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. கிராம ஊராட்சி மக்கள் தங்களின் அனைத்து வகையான வரிகளையும் இணையதளம் மூலமாகத்தான் செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அவ்வகையில் புதிய இணையதளத்தில் நுழைந்தவுடன் சேவைகள் பிரிவின்கீழ் சொத்து வரி கணக்கீடு, நிலுவை வரி தொகை, விரைவாக வரி செலுத்த மற்றும் செலுத்திய வரி விவரங்களை பார்ப்பதற்கு என நான்கு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் முதலில் உள்ள சொத்து வரி கணக்கீடு பிரிவில் நீங்கள் செலுத்த வேண்டிய வரியை கணக்கீடு செய்ய வேண்டும். அதற்காக உங்களின் மாவட்டம் மற்றும் தாலுகா உள்ளீட்டு அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு வரி தொகை ஆன்லைன் முறையில் கணக்கிடப்பட்டு திரையில் தோன்றும். அது மட்டுமல்லாமல் நீங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையையும் இதில் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் மக்கள் எளிதாக வழி செலுத்துவதற்காக https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அரசு புதிதாக உருவாக்கியுள்ளது.