Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!… கண்ணீருடன் வரும் கற்கள்…. வினோத நோயால் அவதிப்படும் பெண்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் விஜயா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீவிர தலைவலி மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டுள்ளார். அப்போது திடீரென விஜயாவின் கண்களில் கண்ணீருடன் சேர்ந்து கற்கள் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயா உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் விஜயாவுக்கு பல்வேறு விதமான சோதனைகளை எடுத்துள்ள நிலையில், சோதனை முடிவுகள் வந்த பிறகு தான் கண்களில் இருந்து கற்கள் வருவதற்கான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து விஜயா கூறுகையில், நான் முதலில் என்னுடைய கண்களில் இருந்து கற்கள் வருகிறது என்று சொன்னபோது ஊர் மக்கள் அனைவரும் என்னை  நடிக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதன் பிறகு தான் ஒரு ஆசிரியரின் உதவியுடன் நான் மருத்துவமனைக்கு வந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு பெண்ணின் கண்களில் கண்ணீருடன் சேர்ந்து கற்கள் வருவது பெரும் வினோதமாக இருப்பதாக பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Categories

Tech |