Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரம்… ஒரே நாளில் 129 பேர் மரணம்… ஈரானில் 853 ஆக உயர்வு!

ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி  129 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சர்வதேச 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே மத்திய கிழக்கு நாடான ஈரான் நாட்டில் கொரோனா மின்னல் வேகத்தில் மக்களை காவு வாங்கி வருகிறது. இந்த கொடிய கொரோனாவின் தாக்குதலுக்கு நேற்று வரை 724 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தநிலையில், ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி  129 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 853 ஆக உயர்ந்து விட்டது. மேலும், 14, 991 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Categories

Tech |