Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி!…. 6,017 பறவைகள் கொல்லப்பட்டது…. மாவட்ட நிர்வாகம் தகவல்…..!!!!

கேரளா கோட்டயம் மாவட்டத்திலுள்ள 3 பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு 6,000 பறவைகள் அழிக்கப்பட்டது. பறவைக் காய்ச்சல் பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றக்கூடிய ஒரு வகை நோய் ஆகும். கோட்டயம் மாவட்டத்தின் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் நேற்று மொத்தம் 6,017 பறவைகள் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதில் வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக் கரையில் 2,975 வாத்துகளும் கொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கு இருந்து உறைந்த கோழிகளை தீவுகளுக்கு கொண்டு செல்வதற்கு லட்சத்தீவு நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

Categories

Tech |