நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேருந்து நிலையத்திற்காக அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மருத்துவமனை ஆண்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு பகுதியில் தெரு நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த நோயாளிகள் வெளியே வந்து பார்த்தபோது கரடி நடமாடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் கரடி புதருக்குள் சென்று மறைந்தது. கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் கரடிகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.