Categories
தேசிய செய்திகள்

10 வருடமாக ஆதார் அட்டையை புதுப்பிக்காதவர்கள் உடனே ஆதாரை புதுப்பிக்க….. மத்திய அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பத்து வருடமாக ஆதார் கார்டை புதுப்பிக்காதவர்கள் உடனே புதுப்பிக்க வேண்டும் என UIDAI கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக அப்டேட் டாக்குமெண்ட் என்ற புதிய அம்சம் ஆதார் இணையதளத்தில் அறிமுகமாகியுள்ளது. மை ஆதார் போர்ட்டலுக்கு சென்று அல்லது ஆதார் நிலையங்களுக்குச் சென்று பொதுமக்கள் ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |