தவறான யூபிஐ ஐடிக்கு பணத்தை அனுப்பிவிட்டு செய்வதறியாது தவிக்கும் பல பயனர்கள் தற்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் இனி அதுபோன்ற தவறுகள் எதுவும் நடந்தால் நீங்கள் பயப்படவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ரிசர்வ் வங்கி உங்களுக்காகவே சில வசதிகளை வழங்குகிறது.
இது போன்ற டிஜிட்டல் சேவைகளில் நீங்கள் தவறுதலாக வேறு நபருக்கு பணம் அனுப்பி விட்டால் உடனடியாக அந்த கட்டண முறைக்கு நீங்கள் புகார் அளிக்க வேண்டும். பேடியும், போன் பே, கூகுள் பே ஆகிய செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்கள் தவறுசெய்யும் பட்சத்தில் உடனே வாடிக்கையாளர் சேவையின் வாயிலாக இழந்த பணத்தை மீட்டெடுக்க கோரிக்கை வைக்கலாம்.
தவறான பயனாளியின் கணக்கில் பணத்தை அனுப்பி விட்டால் இது பற்றி நீங்கள் குறைதீர்ப்பாளரிடம் புகாரளிக்கலாம். உங்களது குறைகளை தீர்ப்பதற்கு ரிசர்வ் வங்கியின் ஓம்புட்ஸ்மேனையும் தொடர்புக்கொள்ளலாம். பிரிவு 8ன் கீழ் பயனாளி இழந்த பணத்தை மீட்டுத் தரும் பொருட்டு ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.