நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், முதலில் எனது தயாரிப்பாளர் தில் ராஜு சார், அவர் முதலில் தெலுங்கில் தயாரித்த திரைப்படம் தில். அதனால்தான் அவருக்கு தில் ராஜு என்ற பெயர் வந்தது. தமிழ் சினிமாவிற்கு உங்களை வரவேற்கிறோம் சார். நீங்க வந்து இங்கே இனிமேல் நிறைய படங்கள் பண்ண போறீங்க.
வெற்றிகரமா இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க போறீங்க என்று எங்கள் ஊரில் முன்கூட்டியே தெரிந்திருக்குது சார். அதனாலதான் நம்ம நண்பர் சந்தானம் தில்லுக்கு துட்டு என்ற படம் எடுத்துருக்கிறாரு. பார்ட்-1 பார்ட்-2ல வந்திருக்கு சார். வாரிசுக்கு வாழ்த்துக்கள் சார். நான் உங்களுக்கு பொறந்த வாரிசு சொன்னேன், வாழ்த்துக்கள் சார்.
அப்புறம் வாரிசு-2 எப்ப சார்..? சார் இப்ப நான் படத்தை பற்றி கேட்டேன்? அந்த வாரிசு-2 இல்ல. நன்றி சார் என பேசினார். இதில் வாரிசு 2 என தளபதி விஜய் சொன்னதும் அவரின் குழந்தையை குறிப்பதை எடுத்துக்கொள்ள கூடாது என ”நான் படத்தை பற்றி” கேட்டேன் சார் என தளபதி விஜய் கலகலப்பாக பேசினார்.