Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்…. 2 தொழிற்சாலைகளை மூடுகிறது ஃபெராரி!

கொரோனா அச்சுறுத்தலால் இத்தாலியில் இருக்கும் தனது 2 தொழிற்சாலைகளை மூடப்போவதாக ஃபெராரி கார் (Ferrari ) நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் வேகமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில் அரசின் சுகாதார வழிமுறைகளின் படி மரனெல்லோ மற்றும் மொடனோவில் இருக்கும் தொழிற்சாலைகளை 2 வாரத்திற்கு மூடுவதாக ஃபெராரி கார் நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Image result for Ferrari is temporarily closing two manufacturing centers in Italy

மேலும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தொழிற்சாலை மூடப்பட்ட நாட்களில் உற்பத்தி சாரா பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

 

Categories

Tech |