Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா…? எய்ம்ஸ் மருத்துவர் வெளியிட்ட தகவல்…!!!!!!

சீனாவில் கொரோனாவின் ஒமிக்ரான் வகை BF7 பாதிப்பு நாளுக்கு நாள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த BF7 வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரபடுத்த  உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் தேவையான தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற அனைத்தையும் இருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர், மருத்துவர் ரன்தீப் குலேரியா இதுகுறித்து கூறியதாவது, இந்தியாவில் உருமாற்றம் அடைந்த தொற்று வகை பரவி வந்தாலும் மக்கள் வலுவூட்டப்பட்ட தடுப்பூசிகளை பெற்றிருப்பதனால் வைரஸ் பரவல் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. மேலும் சர்வதேச விமான பயணிகளை கட்டுப்படுத்துவதால் மட்டும் குறைந்து விடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்கள் கலப்பின நோய் தடுப்பாற்றலை பெற்றிருப்பதனால் ஒமிகிரான் BF7 தொற்றிற்காக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை எனவும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |