Categories
மாநில செய்திகள்

கல்வி உதவி தொகைக்கான தேர்வு…. தமிழக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ,மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவியர் அவர் தம் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50  லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் இத்தேர்வை எழுதலாம்.

இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை https://dgel.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |