அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயி தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்த காரணத்தினால்… விவசாயி, தொழிலாளி என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார் என ஆய்வு செய்து, ஆராய்ந்து, அதன் மூலமாக திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அம்மா அரசாங்கம்.
ஸ்டாலினுக்கு என்ன தெரியும் ? பொம்மை முதலமைச்சர். பொம்மைக்கு கீ கொடுத்தா கை தட்டும், பாருங்க. நம்முடைய குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி கொடுத்து.. கீ கொடுத்தா ஜங் ஜங் என ஓடும். அப்படித்தான் இந்த முதலமைச்சர். இங்கே இருக்கிற அதிகாரி சொல்லுவாங்க… அதை அப்படியே பேசுவாரு. சிந்திச்சு எதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்களா ?
ஒரு திட்டத்தை சொல்லுங்க பார்க்கலாம். நாங்க கொண்டு வந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, அதை போய் திறந்து வச்சுட்டு இருக்காரு. நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை தான் இப்பவும் நடைமுறைப்படுத்திக் கோட்னு இருக்காரு. புதுசா எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அற்புதமான சாலை… கிராமத்தில் இருந்து நகரம் வரை அற்புதமான சாலைகளை அம்மாவுடைய அரசுதான் போட்டு கொடுத்தது. பாலங்கள்… எங்கெல்லாம் போட வேண்டுமோ, அங்கெல்லாம் போட்டுக் கொடுத்தோம். எல்லாமே அம்மாவுடைய அரசு செய்த சாதனை.
அதே போல தாலிக்கு தங்கம் அம்மா கொடுத்தார்கள். இந்த சண்டாளர்கள் அதையும் நிறுத்தி விட்டார்கள். ஒரு பவுன், 40 ஆயிரம் ரூபாய் விற்கிறது. 25,000 50,000 ஏழை குடும்பத்தில் இருந்த பெண்கள் திருமண வயதை அடையும் பொழுது உரிய நேரத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டுவந்த திருமண உதவித்திட்டம், அந்த திட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள் என விமர்சனம் செய்தார்.