பஞ்சாப் மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளில் முதன் முறையாக தேசிய புலனாய்வு முகமை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில் என்ஐஏ குழுவினர் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனர். எல்லை தாண்டிய போதைப் பொருள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக வட இந்தியாவில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின் போது மத்திய சிறையிலிருந்து 2 மொபைல் போன்களை என்ஐஏ குழுவினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடும் அமைப்புகள் சிறையிலிருந்து செயல்படுகிறது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் என்ஐஏ-விடம் இருக்கிறது. அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.