Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…முயற்சிகள் தடைபடும்…தன்னம்பிக்கை கூடும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று எந்த ஒரு முயற்சியும் செய்தாலும் கொஞ்சம் சிறிய தடைகளுக்குப் பின்பே அது நிறைவேறும், கவலை வேண்டாம், அது உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். உற்சாகம் பிறக்கும், மிக உன்னதமான நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்துமே வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். கோபத்தை குறைத்துக் கொள்வது மட்டும் ரொம்ப நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் இன்று ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும், உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

நினைத்த காரியத்தை நீங்கள் சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். அதேபோல எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது தான் ரொம்ப நல்லது. இன்று கூடுமானவரை கொடுக்கல், வாங்கல்களில் ஓரளவு சீராகவே இருக்கும். திருமண வாய்ப்புகளில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். சுபகாரிய பேச்சுகள் நல்லபடியாகவே நடக்கும். காதல் வயப்பட கூடிய சூழல் இன்று இருக்கும். இன்று எந்த ஒரு காரியத்தையும் அலட்சியம் காட்டாமல் செய்தாலே போதுமானதாக இருக்கும். இன்று  மனம் கொஞ்சம் அலைபாய கூடும் கவலை வேண்டாம். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள் மனம் கொஞ்சம் அமைதி பெறும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கல்விக்காக அவர்கள் கடுமையாக உழைப்பார்கள். உழைத்து பாடங்களை படிப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |