விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உங்களுக்கு உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள பதவி கிடைக்கும். அரசு தொழில் வளர்ச்சி திருப்தியாக இருக்கும். இந்த அரசியல்வாதிகளிடம் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவை பெற முடியும். போட்ட முதலீட்டினை இன்று எடுக்கவே நீங்கள் அரும்பாடுபட வேண்டியிருக்கும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள்.
அதனால் விவசாயத்தில் சின்ன சின்ன பாதிப்புகள் ஏற்படும். இன்று சந்தையிலும் விளைபொருட்களுக்கு சுமாரான விலைதான் கிடைக்கும். இன்று கூடுமானவரை முயற்சியின் பேரில் தான் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். வாக்குறுதிகளை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். அதேபோல வாக்குவாதங்களில் யாரிடமும் ஈடுபட வேண்டாம். இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மிக சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சினை வந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது.
எந்தவித கடுமையும் காட்டாமல் நடந்து கொண்டாலே பிரச்சனைகள் உங்களுக்கு சரியாகும். இன்று கொடுக்கல் வாங்கலில் நிதானமான போக்கு காணப்படும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். இருந்தாலும் பேசும்பொழுது நிதானத்தை மட்டும் கடைபிடித்தாலே போதுமானதாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்தே பாடங்களை படிப்பார்கள். அதன் மூலம் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். கல்வியில் நல்ல தரதேர்ச்சி நல்ல மதிப்பெண்களையும் அவர்கள் பெறக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் பச்சை நிறம்