Categories
அரசியல் மாநில செய்திகள்

20 மாசம் போய்டுச்சு… பிளான் பண்ணி செய்யுங்க… DMK அரசுக்கு வகுப்பெடுத்த சசிகலா..!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், அன்னைக்கு கூட….  ஈவினிங் அவங்க டிவி பாத்துட்டு இருக்காங்க. நல்லா எல்லாரு கிட்டயும் பேசுவாங்க. அங்க இருக்கக்கூடிய நர்ஸ் எல்லாம் அம்மாவுக்கு இஷ்டப்பட்டு இருந்தாங்க. டிசம்பர் 19ஆம் தேதி அம்மாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போறதுக்கு நாள் பாத்துட்டு இருக்கோம். அதுக்காக அம்மா என்ன சொன்னாங்க ?

எல்லாருக்கும் அவங்களுக்கெல்லாம் ( நர்ஸ், மருத்துவர்களுக்கு ) ப்ரெசென்ட் கொடுக்கணும். நீ ஆர்டர் பண்ணனும்னு சொன்னாங்க. நாங்க நகை கடையில் இருந்து வர சொல்லி அவங்களுக்கு எல்லாருக்கும் அம்மாவே  பார்த்து செலக்ட் பண்றாங்க. இதுல இத்தனை செட்டு எங்களுக்கு செஞ்சு குடுங்க அப்படி என்கிற வரைக்கும் நாங்கள் பேசி, எங்களுக்கு டிசம்பர் 15 நீங்க கொண்டு வந்து டெலிவரி கொடுக்கணும்.  அம்மா கையால் எல்லாருக்கும் கொடுக்கணும்.  அப்படித்தான் நாங்க இருந்தோம்.

திமுக ஆட்சி செயல்பாடுகள் குறித்து பேசிய சசிகலா, ஒன்ற வருஷம் என ஏன் குறைச்சு சொல்றீங்க. 20ஆவது மாசம் வந்துடுச்சு. இன்னும் நாலு மாசம் ஆனா ரெண்டு வருஷத்தை கம்ப்ளீட் பண்றாங்க. ஒரு ஆட்சி எப்போதுமே பாத்தீங்கன்னா…   தமிழ்நாட்டு பொருத்தவரைக்கும் பார்லிமென்ட் தேர்தல் வருது. அதுல மூன்று மாதம்  அரசாங்கம் எந்த வேலையும் செய்ய முடியாது. எந்த திட்டங்களுக்கும் அறிவிக்க முடியாது. அதுல மூணு மாசம் போயிருது.2026 தேர்தல்ல ஒரு மூணு மாசம் போயிடும். அப்ப மொத்தம் ஆறு மாதம் போய்விடுகிறது.

அப்படின்னா நீங்க செய்யணும்னா நாலரை வருஷத்துக்குள்ள தான் செய்யணும்.   அது மாதிரி பிளான் பண்ணி தான் செய்யணும். இப்போ  மக்கள் உங்களுக்கு ஓட்டு போடறேன்…  எனக்கு நீ இதை செய்… அப்படின்னு தமிழ்நாட்டு மக்கள்  கேட்கல.  ஆனால் நீங்களா தேர்தல் வாக்குறுதி கொடுக்குறீங்க. நீங்களா கொடுத்துட்டு,  கொடுத்ததை செய்யணும் இல்ல.  நீங்க டிவில  விளம்பரப்படுத்தினால் மட்டுமே அது ஆட்சி கிடையாது. மக்களுக்கு போய் சேர வேண்டியது சேரனும். அதை செய்யலன்னா மக்களே முடிவு பண்ணுவாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |