சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முக கவசம் அணிதல், சானிடைசர், தனிமனித இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பது ஏற்கனவே இருக்கும் நடைமுறை. எனவே இவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைபிடிப்பது நல்லது என்று கூறியுள்ளார்.