தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறிப்பிட்ட ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்று ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் உள்ளன. அதில் PHH என்ற முன்னுரிமை உள்ள அரிசி மற்றும் அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்குபவர்கள், PHH-AAYஎன்ற 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களையும் வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள், NPHHஎன்ற அரிசி உட்பட அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும். மேலும் NPHH-S என்ற சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், NPHH-NC என்ற எந்த பொருள்களையும் வாங்காதவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படாது என்று புதிய தகவல் வெளியாகி இருப்பது ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.