கொரோனா அச்சம் காரணமாக 3 நாட்களுக்கு இலங்கையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா ஓட்டு மொத்த உலகையும் கொலை நடுங்க செய்து வருகிறது. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கொரோனாவின் பிடியில் இலங்கையும் சிக்கிவிட்டது. இலங்கையில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று தொடங்கி 3 நாட்களுக்கு இலங்கையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த பொது விடுமுறை பொருந்தும் என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.