சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் ராமானுஜ நகர் மேம்பாட்டு தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை இறுதிச்சடங்கில் பங்கேற்ற 40க்கும் அதிகமானோர் உணவு சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சூரஸ்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சிங் கூறியதாவது, உணவு கெட்டுப்போனதால் அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். தற்போது அனைவரும் நலமாக இருக்கின்றனர். மேலும் இதுகுறித்து உரிய காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.