Categories
மாநில செய்திகள்

22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம்… எங்கெல்லாம் மழை…? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள இலங்கை கடலோர பகுதிகளின் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 25-ஆம் தேதி காலை நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையில் நகர்ந்து திரிகோணமலைக்கு தெற்கே இலங்கை கடற்கரையை கடந்து அதன் பின் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 26-ஆம் தேதி காலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைபெறும்.

இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வட மாவட்டங்கள் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனையடுத்து தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி ஒரு சில இடங்களிலும் வரும் 28, 29-ஆம் தேதி ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |