தமிழ் சினிமாவில் காதலின் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இந்தப் படத்திற்கு பிறகு வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கினார். இவர் அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் ஒரு பேட்டியில் பாலாஜி மோகன் நடிக்கும் தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு அவரை நடிக்க விடாமல் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று பேட்டியில் கூறினார். இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் தீயாக பரவிய நிலையில், தற்போது நடிகை தனியா மற்றும் பாலாஜி மோகன் ஆகியோர் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், நான் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நடிகை தன்யாவை திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய திருமணம் மற்றும் காதல் குறித்து தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் யூடியூப் சேனல்களில் தொடர்ந்து அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார். அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகிறார். எனவே எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களை தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதிப்பதோடு எங்களைப் பற்றி அவதூறு பரப்பியதற்காக ஒரு கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த பாலாஜி மோகன் மற்றும் நடிகை தன்யா பற்றி அவதூறு கருத்துகளை பரப்புவதற்கு தடை விதித்தது. அதோடு ஜனவரி 20-ஆம் தேதிக்குள் கல்பிகா கணேஷ் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மூலம் பாலாஜி மற்றும் தன்யா திருமணம் செய்து கொண்டது உறுதியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் ஒரு பேட்டியில் பாலாஜி மோகன் நடிகை தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு அவரை நடிக்க விடாமல் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று பேட்டியில் கூறினார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீயாக பரவிய நிலையில், தற்போது நடிகை தன்யா மற்றும் பாலாஜி மோகன் ஆகியோர் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நான் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நடிகை தன்யாவை திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய திருமணம் மற்றும் காதல் குறித்து தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் யூடியூப் சேனல்களில் தொடர்ந்து அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார். அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகிறார். எனவே எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களை தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதிப்பதோடு எங்களைப் பற்றி அவதூறு பரப்பியதற்காக ஒரு கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பாலாஜி மோகன் மற்றும் நடிகை தன்யா பற்றி அவதூறு கருத்துகளை பரப்புவதற்கு தடை விதித்தது. அதோடு ஜனவரி 20-ஆம் தேதிக்குள் கல்பிகா கணேஷ் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுவின் மூலம் பாலாஜி மற்றும் தன்யா திருமணம் செய்து கொண்டது உறுதியாகியுள்ளது.