Categories
கல்வி சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ….!!

புதுச்சேரியிலும் வருகின்ற 31ஆம் தேதி வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் இதேபோன்று பள்ளி , திரையரங்கு ,  பெரிய மால்களை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற 31ஆம் தேதி வரை விடுமுறை என்றும் , திரையரங்கம் , மால்கள் அனைத்திலும் மூட உத்தரவிட்டுள்ளார். அதே போல பொதுமக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும், திருமண நிகழ்ச்சியில் இருந்தால் உறவினர்கள் குறைந்த அளவிலேயே பங்கேற்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |