பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கடந்த சட்டசபை தேர்தல் கூட்டத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருந்ததாவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதை திறம்பட செயல்படுத்த விட வேண்டும் எனவும், பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதன்படி மஞ்சள் பை பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெறுபவர்களுக்கு 1 பரிசாக 10 லட்ச ரூபாயும், 2-வது பரிசாக 5 லட்ச ரூபாயும், 3-வது பரிசாக 3 லட்ச ரூபாயும் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் அல்லது நிறுவன தலைவரால் கையொப்பமிடப்பட்டு இருக்க வேண்டும். இந்த கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதிகள் இறந்தினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற மே 1-ம் தேதிக்குள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.