Categories
மாநில செய்திகள்

பொய்யிலே பிறந்து வளர்ந்தவர் சசிகலா!…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்….!!!!

2004ம் வருடம் ஏற்பட்ட ஆழிபேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். லான்ச் படகு வாயிலாக நடுக் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்களை தூவியும் மறைந்தவர்களுக்கு மரியாதை செய்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கும் நன்மை செய்யவில்லை.

ஓ.பி.எஸ் ஒரு டம்மி, ஒரிஜினல் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மேல் எனக்கு நிறைய மரியாதை இருக்கு. இதனால் அவரை நான் விமர்சனம் செய்யவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரனை தி.மு.க-ன் பி டீமாக பார்க்கிறேன். அ.தி.மு.க-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சசிகலா கூறியது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய். சசிகலா பொய்யிலே பிறந்து வளர்ந்து, பொய்யின் ஒரு உருவமாய் உள்ளவர்” என்று அவர் பேசினார்.

Categories

Tech |