Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த மீன் வியாபாரி சுஜில் என்பவர் மொத்தமாக மீன்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் மீன் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சுஜில் முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவரது கார் லோயர் பஜார் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |