கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கறிக்கோழியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் கறிக்கோழியின் விலை கடுமையாக சரிந்து உள்ளதால் அதன் உற்பத்தியை குறைக்க பண்ணை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்லடத்தில் கொள்முதல் விலை ரூபாய் 28 க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனையில் 60 ரூபாய்க்கு விற்கப்படும் கோழி இறைச்சியை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கோழிப்பண்ணையாளர்கள் வரும் வெள்ளிக்கிழமை அன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இதேபோல நாமக்கல் பண்ணைகளில் 25 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. தேங்கியுள்ள முட்டைகளை அளிப்பதை விட வேறு வழி இல்லை என்று பண்ணையாளர்கள் கூறுகின்றனர். முட்டை உற்பத்தியை தவிர்ப்பதற்காக 20 வாரங்களுக்கு மேல் ஆன முட்டை என கோழிகளை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
முட்டை உற்பத்தி மையமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. மொத்த உற்பத்தியில் 40% முட்டைகள் கேரளத்திற்கும், 20 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது முட்டைகளை ஏற்றுமதி செய்ய முடியாததால் அவை தேக்கம் அடைந்துள்ளன.