தமிழகத்தில் சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அது வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்காமல், உடனே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவித்துள்ளார். மேலும், சான்றிதழ்கள் தரப்பட்ட விவரங்களை உடனுக்குடன் தகவல் பலகையில் பதிவேற்றம் செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.