Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கொரோனா பத்தி தவறான தகவல்களை பரப்பாதீங்க”… வேண்டுகோள் விடுத்த ரெய்னா!

கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு, 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை மூட வரும் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் அனைத்துமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Image

இதனிடையே ஐபிஎல் தொடருக்காக பயிற்சி எடுப்பதற்காக சென்னை வந்திருந்த சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் நேற்று சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் கொரோனா குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றி கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |