Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய 3 பேர் கைது …!!

கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி காட்டியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு பள்ளி ,கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா குறித்த வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் வேலூர் குடியாத்தம் அருகே கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பிய சிவகுமார் , சுகுமார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |