தங்கள் மதம் சார்ந்து பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் கடமை இந்துக்களுக்கு உண்டு என பாஜக எம்பி பிரக்யா தாகூர் கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர், இந்துக்கள் தங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தி போன்ற ஆயுதங்களை ஆவது வைத்துக் கொள்ளுங்கள். தங்களை காத்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. நம்மை யாரேனும் தாக்க முற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது தான் நல்லது. உங்கள் மகள்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள், சரியான நெறிமுறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்
Categories