Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!… அது எடிட் பண்ண தல அஜித் போட்டோவா?… தெரியாமல் பகிர்ந்த “கழுகு” பட நடிகர்…. நெட்டிசன்கள் கேலி….!!!!

தல அஜித்குமார், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க் கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து உள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதையடுத்து 3வது பாடலை படக்குழு வெளியிட்டது. கழுகு திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணா, அஜித்குமாரின் புது போட்டோவை பகிர்ந்து தீயாக இருப்பதாக எமோஜிக்களை பதிவிட்டிருந்தார்.

எனினும் இந்த புகைப்படம் அதிகாரபூர்வமாக படக்குழு வெளியடவில்லை. அது ரசிகர்கள் எடிட் செய்தது ஆகும். அந்த போட்டோவை கிருஷ்ணா தெரியாமல் பகிர்ந்து கிண்டலுக்குள்ளாகி வருகிறார். இணையத்தில் பகிரும் முன் உண்மைதன்மை பரிசோதிக்க வேண்டும் என அவரது பதிவுக்கு கீழ் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |