இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தின் விசாரணை தொடர்பாக கமல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் படி இயக்குனர் ஷங்கரிடம் விபத்து நிகழ்ந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஆஜராக விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது , நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் கமலிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்தது. இதை கேட்டுக் கொண்ட நீதிபதி , காவல்துறை விசாரணைக்காக விபத்து நடந்த இடத்திற்கு கமல், நாளை நேரில் செல்ல வேண்டியதில்லை. விசாரணைக்கு தேவைப்பட்டால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகலாம் என்று தெரிவித்தார்.