Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் மேலாளர் சொன்னது ஒன்னு!…. ஆனால் இங்கே நடப்பது ஒன்னு!…. தளபதி ரசிகர்கள் கேள்வி….!!!!

தல அஜித்குமார், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க் கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து உள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனமானது வெளிநாடுகளில் வேற லெவல் புரமோஷனை செய்து வருகிறது. அதாவது வானத்தில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு துணிவு திரைப்படத்தின் அப்டேட் வருகிற 31 ஆம் தேதி அன்று வெளியாகும் என புது புரமோஷன் வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வேற லெவல் அப்டேட் என இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதற்கு சில இணையவாசிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் “நல்ல படத்துக்கு புரமோஷன் தேவையில்லை என கூறிவிட்டு இப்படி செய்வது இது நல்ல படமல்ல என அர்த்தமாகுமா..?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். அண்மையில் அஜித்தின் மேலாளர் நல்ல படத்துக்கு புரமோஷன் தேவையில்லை என பதிவிட்டிருந்தார். தற்போது விஜய் ரசிகர்கள் இந்த பதிவினை ஸ்கிரின்ஷாட் எடுத்து கேலியாக பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |