இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.
உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கக்கூடிய பயணிகள் மிகப் பெரிய சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.நேரடியாகவே சுற்றுலாத்துறை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது மலேசியாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மலேசிய வாழ் தமிழர்கள் மற்றும் மலேசியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு வந்து இருக்கிறார்கள். இங்குள்ள நிறைய இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர்கள் மீண்டும் இந்தியாவில் இருந்து அவர்கள் சொந்த நாடான மலேசியாவில் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இங்குள்ள அனைவரும் எங்கே தங்குவது ? என்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடிய நிலையில் அவர்கள் டெல்லியில் இருக்கக்கூடிய மலேசிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்து , மலேசியா அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவார்கள். இவர்கள் அனைவருமே பூர்வீகமாக மலேசியா இருக்கக்கூடியவர்கள், சுற்றுலாவுக்காக இங்கு வநத நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மலேசியாவிற்கு எந்தவிதமான விமானங்களும் கிடையாது என்று இன்றுதான் இந்திய அறிவித்துள்ள நிலையில் தற்போது நாடு திரும்ப முடியாமல் அவதிபட்டு வருகின்றார்கள்.