தென்கொரியாவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் புதியதாக 46 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கொரோனோ வைரஸ் நோய் பிரச்சனை தீர வேண்டுமென சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் 90 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் பாஸ்டர் புனிதநீரை கொடுத்துள்ளார். இந்த புனித நீரை ஒரே பாட்டிலில் அனைவரது வாயிலும் படும்படி அவர் கொடுத்ததன் காரணமாக புதியதாக 46 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது.
மக்கள் அதிகம் கூடுவதை முடிந்தளவிற்கு தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் பலமுறை அறிவுறுத்தி வந்த போதிலும், இது போன்ற நிகழ்வுகளால் புதியதாக பலரிடம் கொரோனோ பரப்பப்படுவது வேதனை அளிக்கிறது. ஓர் அடி தூரத்தில் நின்று தும்மினாலோ இருமினாலோ கொரோனோ எளிதாக பரவிவிடும் என்று இருக்கும் பட்சத்தில், ஒரே பாட்டிலில் அனைவரது வாய் படும்படி புனித நீரை ஊற்றி இருக்க கூடாது. இதனை அந்த மக்கள் சற்று சிந்தித்து செயல்பட்டிருந்தால் 46 பேருக்கு புதுயதாக கொரோனோ வந்திருக்காது.