Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் போலி ஓ.பன்னீர்செல்வம்: நத்தம் விஸ்வநாதன் காட்டம்!!

அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் போலி ஓ பன்னீர்செல்வம் என்றும் நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல் வழியாக இருக்கிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரக்கூடிய மாவட்ட செயலாளர்கள்,  கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த கருத்தாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலை போலவே நாடாளுமன்றத் தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் எதிர்கொண்டு பெருன்பான்மை   வெற்றி பெறுவதற்கு மாவட்ட செயலாளர்கள் உறுதுணையாக இருப்போம் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார்கள்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில்  பேசக்கூடிய முக்கிய நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வத்துக்கு எதிரான கருத்துக்களை  பதிவு செய்து கொண்டு வருகிறார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று நம்பிக்கையான வார்த்தைகளும் அவர்கள் தெரிவித்ததாக  தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Categories

Tech |